மக்கள் விரோத ஊழல் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம்.
Jan 14, 2026, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் விரோத ஊழல் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம்.

Murugesan M by Murugesan M
Sep 15, 2023, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தும் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்றைய ”என் மண் என் மக்கள்” பயணம் முடிமலை, அழகர்மலை, கரந்தமலை என மூன்று மலைக்குன்றுகளின் நடுவே அமைந்துள்ள நத்தம் நகரில், மக்கள் ஆரவாரத்துடன் நடைபெற்றதில் மகிழ்ச்சி.

இன்றைய #EnMannEnMakkal பயணம் முடிமலை, அழகர்மலை, கரந்தமலை என மூன்று மலைக்குன்றுகளின் நடுவே அமைந்துள்ள நத்தம் நகரில், மக்கள் ஆரவாரத்துடன் நடைபெற்றதில் மகிழ்ச்சி.

தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. மதுரை மற்றும் நத்தம்… pic.twitter.com/WYpc8Kmfrz

— K.Annamalai (@annamalai_k) September 14, 2023

தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. மதுரை மற்றும் நத்தம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க 7.3 கிமீ, தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலத்தை 613 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு வழங்கியது.

இதை நமது பாரத பிரதமர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த 1159 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது நமது மத்திய அரசு.

மாம்பழ சாகுபடிக்கு பெயர்போனது நம் நத்தம். சுமார் 7000 ஏக்கர் பரப்பளவில் செந்தூரம், நீளம், அல்போன்சா, இமாம்பசந்த் வகை மாம்பழங்கள் இங்கே விளைவிக்கப்படுகிறது. சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் புளி சாகுபடி நடக்கிறது.

திருப்பூருக்கு அடுத்தபடியாக ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் நத்தம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நத்தம் கணவாய் போர் போன்ற நமது வீர வரலாறு நமது பாடப் புத்தகங்களில் இடம் பெறாதது வருத்தம்.

ஆற்காடு நவாப்புக்கு எதிரான வீரப்போரில் நம் மக்கள் வெற்றி பெற்றதன் சான்றாக அடிக்கல் நாட்ட வேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக இருக்கிறது. அடிப்படையில் நாம் அனைவரும் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

நமக்குள்ளே எந்தப் பிரிவினையும் இல்லாது, அனைத்துச் சமூகமும் ஒற்றுமையாகச் சேர்ந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி, நமது கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக பாஜக துணை நிற்கும்.

நத்தம் தொகுதிக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான நத்தம் அரசு கலைக் கல்லூரி, நத்தம் ஆயத்த ஆடை தொழில் பூங்கா, மா, புளி உள்ளிட்ட வேளாண் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு அரசின் நேரடி கொள்முதல் நிலையம், நத்தம் மாம்பழக் கூழ் தொழிற்சாலை என ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளை மத்திய அரசு கவனத்துக்குக் கொண்டு சென்று நிறைவேற்றுவோம். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தும்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பால் விலையை 25 சதவீதம் ஏற்றிவிட்டார்கள். ஆவின் 1 லிட்டர் நெய் விலை 515 ரூபாயாக இருந்தது இன்று 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மின்சார கட்டணம் 15 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

சொத்துவரி 50 சதவீத உயர்வு. பத்திரப்பதிவு கட்டணம் 60 முதல் 500 சதவீதம் உயர்வு. குடிநீர் வரி உயர்வு. இதை சமாளிக்கத் தான் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் 1000 ரூபாய். ஆனால் அதுவும் அனைத்து மகளிருக்கும் இல்லை.

தமிழகத்தில் உள்ள 1.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் கிடைக்காது. இங்கே இருக்கும் பாதி மகளிருக்கு இந்த திட்டத்தில் பணம் வராது. திமுக ஆட்சியின் விலை ஏற்றத்தை சமாளிக்கவே இந்த 1000 ரூபாய் திமுகவின் மகளிர் உரிமைத் திட்டம்.

மக்கள் விரோத, குடும்ப ஆட்சிக் கூட்டணியான, ஊழல் திமுக கூட்டணியை, வரும் பாராளுமன்ற தேர்தலில் முழுமையாகப் புறக்கணிப்போம். தமிழகத்துக்கு பல நலத்திட்டங்கள் கொண்டு வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர, தமிழகம் வாக்களிப்போம், எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal rally
ShareTweetSendShare
Previous Post

20 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன?

Next Post

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் நடைதிறப்பு

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies