20 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன?
Sep 14, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

20 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன?

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா கேள்வி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 15, 2023, 10:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராகுல் காந்தி நீண்டகாலமாக அமேதி தொகுதியில் தான் போட்டியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செய்தது என்ன? என்று தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், சந்திரசேகர ராவின் மகள் கவிதா, ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கவிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, நீண்டகாலமாகவே அமேதி தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். அந்தவகையில், கடந்த 20 ஆண்டுகளில் ராகுல் காந்தி அமேதி தொகுதிக்குச் செய்தது என்ன?

காங்கிரஸ் கட்சிக்கு தேச மக்கள் மீது துளியும் அக்கறை இல்லை. பல்வேறு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். பல திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே செய்ததையே மீண்டும் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். மக்களுக்காக காங்கிரஸ் கட்சி சிந்திக்கவில்லை. ஆகவே, காங்கிரஸ் கட்சியை மக்கள் எல்லா இடங்களிலும் நிராகரிப்பார்கள்.

தனிநபர் வருமானம் முதல் தண்ணீர் சேகரிப்பு, நலத்திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் என எல்லாவற்றிலும் தெலங்கானா முதலிடத்தில் இருக்கிறது. ஐதராபாத்தில் பல தொழில் நிறுவனங்களுக்கு முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன” என்றார். அதேசமயம், டெல்லி மதுபான கொள்கை ஊழல் பண மோசடி வழக்கில் கவிதா சிக்கி இருக்கிறார். இது தொடர்பாக, செப்டம்பர் 15-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், நாளை ஆஜராகப் போவதில்லை என்று கவிதா தெரிவித்திருக்கிறார்.

Tags: rahul gandhiTelanganaCM Chandrasekara raoDaughterKavithaQuestion
Share
Tweet
SendShare
Previous Post

மெட்ராஸ் ஐ அறிகுறிகள் !

Next Post

மக்கள் விரோத ஊழல் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம்.

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies