உலகப் புகழ் பெற்ற திருமலை திருப்பதி பிரமோற்சவம் வரும் 18 -ம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவம் என்பது இந்து சமய நம்பிக்கையின்படி, பிரம்மனால் நடத்தப்படுகின்ற உற்சவமாக கொண்டாடப்படுகிறது. திருக்கோவில் விழாக்களில் நடைபெறும் உற்சவங்களில், பிரம்மோற்சவ விழா மிகச் சிறப்பாக கொண்டாப்படுகிறது.
2023-ம் வருடம் திருப்பதி, திருமலையில் 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த நிலையில், திருமலையில் முதல் பிரம்மோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் இந்த விழா கோலாகலமாக நடைபெறும்.
அதாவது, 18-ம் தேதி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22 -ம் தேதி கருட வாகன சேவையும், 23 -ம் தேதி தங்கத்தேரோட்டமும், 25 -ம் தேதி திருத்தேரோட்டமும், 26 -ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
பக்தர்கள் நலன் கருதி, திருப்பதிக்கு வரும் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து திருப்பதிக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.