கதிர்வீச்சு காரணமாக ஆப்பிள் ஐபோன் 12 யை தடை செய்துள்ளது பிரான்ஸ் .
பிரான்ஸின் கதிர்வீச்சு கண்காணிப்பு நிறுவனம், ஆப்பிள் ஐபோன் 12 யை சோதனை செய்த பிறகு, ஸ்மார்ட்போன் ஐரோப்பிய கதிர்வீச்சு வெளிப்பாடு வரம்புகளை மீறியதாகக் கூறியது. இதைத் தொடர்ந்து ஐபோன் விற்பனையைத் தடை செய்துள்ளது.
ஏஜென்ஸ் நேஷனல் டெஸ் பிரீக்வென்சஸ் ( ANFR ) செவ்வாயன்று, மாதிரியின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதம் (SAR) ஒரு உபகரணத்திலிருந்து உடலால் உறிஞ்சப்படும் கதிரியக்க அதிர்வெண் ஆற்றலின் வீதத்தின் அளவீடு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது என்று கூறியது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனம், உலகளாவிய கதிர்வீச்சு தரநிலைக்கு உட்பட்டு ஐபோன் 12 ன் இயக்கம் இருப்பதாக உலக நாடுகளின் முகமைகள் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை அந்நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. இருப்பினும் தாங்கள் மேற்கொண்டு பரிசோதனை, ஆப்பிள் மேற்கொண்ட சோதனைக்கு முற்றிலும் மாறானது என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.