ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று தொடங்கி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தப் போட்டி வெறும் கண்துடைப்புப் போட்டியாகவே நடத்தப்படுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் இல்லை தோல்வி அடைந்தாலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது உறுதி.
இந்தப் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றாலும் கூட பயன் ஒன்றும் இல்லை. இருப்பினும் இந்திய அணி வீரர்கள் வெற்றியை நோக்கி விளையாடிக் கொண்டுள்ளார்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிட்டன் தாஸ் டக் அவுட்டிலும், தன்ஜித் ஹசன் 13 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். வங்கதேச அணியின் அனாமுல் ஹக் 11 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்து ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேசம் அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.