தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சல் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது மக்கள் 3 அடுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் பருவ காலத்தில் பரவும் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவை இணைந்து பரவி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
குறிப்பாகப் பொதுமக்களுக்குச் சளி, காய்ச்சல், இருமல், தொண்டை அலர்ஜி, உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு, உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டும்.
அதேபோல, சமீப காலமாக ப்ளூ வைரங்களால் பரவும் இன்ப்ளூயன்சியா காய்ச்சலும் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியதாகவும்.
குறிப்பாக, நோய்த் தொற்று ஏற்பட்டாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்குப் பரவாமல் பாதுகாக்க வேண்டும்.
மேலும், மருத்துவத்துறையில் சுகாதாரப் பணியாளர்கள், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களும் 3 அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.