ஆட்டநாயகன் விருது பெற்ற சிராஜ், அவர் வென்ற 5 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்குப் பரிசாக கொடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகம்மது சிராஜ் ஏற்படுத்தியுள்ளார். ஆசிய கோப்பைத் தொடரில் இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதேபோன்று அதிவேகமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்று இலங்கை அணியின் ஜாம்பவான் சமிந்தா வாஸ் ஏற்படுத்திய சாதனையைச் சிராஜ் சமன் செய்துள்ளார். இதனால் இலங்கை அணி 50 ரன்களில் ஆட்டம் இழந்தது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை இந்தியா மிக எளிதாக வென்று 8 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது, 6 விக்கெட்களை கைப்பற்றிய சிராஜ்க்கு வழங்கப்பட்டது. அவருக்கு பரிசுத் தொகையாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட சிராஜ் அந்த பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்குப் பரிசாக கொடுத்தார்.