ஜம்மு-காஷ்மீர் இந்தியாவில் இணைந்து 76 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டியும், இந்திய விமானப் படையின் 60-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டும் ஜம்முவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்திய விமானப் படையும், ஜம்மு நிர்வாகமும் இணைந்து செப்டம்பர் 21-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இரண்டு நாட்கள் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி இந்திய விமானப் படையின் பலத்தை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் ஜம்முவில் உள்ள விமானப் படை தளத்தில் உலகத் தரம் வாய்ந்த இந்திய விமானப் படையின் போா் விமானப் பயிற்சி அணி, சூா்யகிரண் விமான சாகச அணி, ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் அணி உட்பட 9 விமானப்படை அணியும், ஹாக் எம்கே-32 ரக ஹெலிகாப்டா்கள் மற்றும் சுகோய்-30 ரக போா் விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளது. மேலும், பார்வையாளர்களைக் கவரும் வகையில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.