ஆதித்யா எல்-1 அறிவியல் தரவுகள் சேகரிப்பு!
Nov 13, 2025, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா எல்-1 அறிவியல் தரவுகள் சேகரிப்பு!

இந்திய விண்வெளிஆராய்ச்சி மையம் தகவல்!

Web Desk by Web Desk
Sep 18, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம், அறிவியல் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கி இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர், இரு வாரங்கள் ஆய்வில் ஈடுபட்டு தகவல்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. தற்போது உறக்க நிலையில் உள்ள ரோவர், செப்டம்பர் 22-ம் தேதி நிலவில் சூரியன் உதித்த பிறகு மீண்டும் செயல்படும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, சூரியனை ஆய்வு செய்வதற்காக செப்டம்பர் 2-ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப் பாதையில் பயணம் மேற்கொண்டு வரும் ஆதித்யா எல்-1 விண்கலம், நாளை (செப்டம்பர் 19-ம் தேதி) புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து வெளியேறி சூரியனை நோக்கி பயணம் செய்யவுள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சென்று, சூரியனை ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும்.

இந்த நிலையில், 50,000 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது, செப்டம்பர் 10-ம் தேதியே ஆதித்யா எல்-1 விண்கலம், சூப்ரா தெர்மல் அண்ட் எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) கருவியைப் பயன்படுத்தி அறிவியல் தரவை  சேகரிக்கத் தொடங்கி விட்டதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இது பூமியின் ரேடியசில் இருந்து 8 மடங்கு அதிகமாகும். இந்த ஸ்டெப்ஸ் கருவியில் 6 சென்சார்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு வெவ்வேறு திசைகளிலும் ஆய்வுகள் நடைபெறுகிறது.

ஸ்டெப்ஸ் கருவி அதிவெப்ப மற்றும் ஆற்றல் மிக்க அயனிகள் மற்றும் எலெக்ட்ரான்களை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புவி வட்டப்பாதையில் சேகரித்த தரவு, பூமியின் துகள்கள், காந்தப் புலன் பற்றிப் பகுப்பாய்வு செய்வதாகவும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. அகமதாபாத்தில் அமைந்துள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் (SAC) இணைந்து இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தால் (PRL) வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Aditya-L1 Mission:
Aditya-L1 has commenced collecting scientific data.

The sensors of the STEPS instrument have begun measuring supra-thermal and energetic ions and electrons at distances greater than 50,000 km from Earth.

This data helps scientists analyze the behaviour of… pic.twitter.com/kkLXFoy3Ri

— ISRO (@isro) September 18, 2023

 

Tags: aditya l1SPACECRAFTstartedscientific mission
ShareTweetSendShare
Previous Post

புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது புதிய நம்பிக்கை பிறக்கும்!

Next Post

டாப் 20 நாடுகளில் இந்தியாதான் நம்பர் 1!

Related News

பிரசாதத்தில் விஷத்தை கலந்து கொலை செய்ய திட்டம் : பயங்கரவாதிகளின் MASTER PLAN முறியடிப்பு!

பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட்டதா Al-Falah பல்கலைக்கழகம்? – இறுகும் பிடி விசாரணையில் பகீர் தகவல்கள்!

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies