ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அபார வெற்றி பெற்று 8வது முறையாக ஆசிய கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இதுவரை அதிக முறை ஆசியக் கோப்பையை வென்ற அணி என்னும் பெருமையும் இந்திய அணி கொண்டுள்ளது.
இதற்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிப் பெற்ற இந்திய அணிக்கு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Well played Team India!
Congratulations on winning the Asia Cup. Our players have shown remarkable skill through the tournament. https://t.co/7uLEGQSXey
— Narendra Modi (@narendramodi) September 17, 2023
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ செய்தியில், “சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றதற்கு வாழ்த்துக்கள். நமது வீரர்கள் போட்டியின் மூலம் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.