1948 ஆம் ஆண்டு நாடாளுமன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, 75வது ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
அதன்படி, நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத் தொடர், செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடர் இன்று பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப் பட்டது.
நாளை முதல், நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி பிரதமர் மோடி செங்கோல் நிறுவி திறந்து வைத்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை நடைபெறும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மசோதாக்களும் நிறைவேற்றப் படவுள்ளதாகவும், இது குறித்தே இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டதாக தெரிய வருகிறது.