தைவான் மற்றும் இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தைவான் தீவு ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். இந்நிலையில் நேற்று தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 171 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தைவானின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதேபோல், இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் மாகாணத்துக்கு வடமேற்கே அமைந்துள்ள மராடி நகருக்கு அருகே நேற்று அதிகாலை 5.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டா் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது என்று அந்நாட்டின் நில இயற்பியல் மற்றும் புயலியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, அந்தப் பகுதி நிலநடுக்க அபாயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.