மும்பை ஐ.ஐ.டி. மாணவருக்கு 3.7 கோடி சம்பளம்!
Sep 5, 2026, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை ஐ.ஐ.டி. மாணவருக்கு 3.7 கோடி சம்பளம்!

கேம்பஸ் இன்டர்வியூவில் சர்வதேச நிறுவனத்தில் வேலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 19, 2023, 04:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேம்பஸ் இன்டர்வியூவில் மும்பை ஐ.ஐ.டி. மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 3.7 கோடி ரூபாய் சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் சம்பளம் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

மும்பை ஐ.ஐ.டி. கல்லூரியில் ஆண்டுதோறும் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெறும். இந்த வேலைவாய்ப்பில் இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த அதிகபடியான மாணவர்கள், சர்வதேச நிறுவனங்களுக்கு தேர்வாவார்கள். அந்த வகையில், இந்தாண்டும் மும்பை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ சமீபத்தில் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டன.

பல்வேறு சுற்றுக்களாக நடத்தப்பட்ட இம்முகாமில், சர்வதேச நிறுவனங்களில் சுமார் 300 வேலைவாய்ப்புகள் இருந்த நிலையில், 194 இடங்கள் மாணவர்களால் நிரப்பப்பட்டது. இதில், மும்பை ஐ.ஐ.டி. மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 3.7 கோடி ரூபாய் சம்பளத்தில் சர்வதேச நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அந்த பட்டதாரி சர்வதேச வேலைவாய்ப்பில் இதுவரை இல்லாத அளவில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

கடந்தாண்டு மும்பை ஐ.ஐ.டி. கல்லூரியில் மிக உயர்ந்த சர்வதேச வேலைக்கான வருடாந்திர சம்பளம் 2.1 கோடி ரூபாய்க இருந்தது. தற்போது அதைவிட அதிகமாகவும், இதுவரை இல்லாத அளவிலும் ஆண்டு சம்பளம் 3.7 கோடி ரூபாய் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. அதேபோல, உள்நாட்டு வேலைவாய்ப்பில் அதிக வருவாயாக 1.7 கோடி ரூபாய் சம்பளத்தில் ஒரு மாணவருக்கு வேலை கிடைத்திருக்கிறது. கடந்தாண்டு உள்நாட்டு சம்பளத்தில் அதிகபட்சம் 1.8 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், இந்தாண்டு 1.7 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.

வர்த்தக சந்தை பாதிப்பு காரணமாகவே உள்நாட்டு சம்பளம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவிர, ஆண்டு சம்பளம் 1 கோடி ரூபாய்க்கு மேல் 16 மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இந்த வருவாய் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களை ஐ.ஐ.டி. நிறுவனம் வெளியிடவில்லை. கடந்தாண்டு ஜூலை முதல் இந்தாண்டு ஜூன் வரையில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் மொத்தம் 2,174 மாணவர்கள் பதிவு செய்ததில், 1,845 பேர் பங்கேற்றனர். இவர்களில் 1,516 பேருக்கு வேலை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: IIT BombaySalary packageRs. 3.7 croreper year
Share
Tweet
SendShare
Previous Post

சாம்சன் போட்ட பதிவு – இரசிகர்கள் சோகம் !

Next Post

நாயக்கர் கால கருப்புசாமி சிலை கண்டெடுப்பு !

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies