ஐஐடி கான்பூரின் இன்குபேட்டட் ஸ்டார்ட்-அப் நடத்திய புதிய ஆய்வில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2023 வரை நாட்டில் நடந்த சைபர் குற்றங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நிதி மோசடிகள் நடந்துள்ளன, இதில் கிட்டத்தட்ட 50 சதவீத வழக்குகள் UPI மற்றும் இன்டர்நெட் பேங்கிங் தொடர்பானவை என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்கள் தொடர்பான குற்றங்களான ஆள்மாறாட்டம், சைபர் மிரட்டல், செக்ஸ்டிங் மற்றும் மின்னஞ்சல் தகவல் திருட்டு போன்றவற்றால் ஆன்லைன் குற்றங்களில் 12 சதவீதம் இந்த காலகட்டத்தில் நடந்துள்ளன என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) Future Crime Research Foundation (எஃப்சிஆர்எஃப்) அதன் சமீபத்திய விரிவான ஒயிட் பேப்பரான ‘A Deep Dive into Cybercrime Trends Impacting India’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு இந்த கண்டுபிடிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. .
தற்போது அதிகபட்சமாக 77.41 சதவீத குற்றங்கள் ஆன்லைன் நிதி மோசடிகளில் நடந்துள்ளது என்றும் இது போன்ற ‘ஆன்லைன் நிதி பரிவர்த்தனைகள்’ தொடர்பான மோசடி நடவடிக்கைகளை உள்ளடக்கிய குற்றங்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ளவேண்டியவை என FCRF குறிப்பிட்டுள்ளது.
மேலும் “டெபிட்/கிரெடிட் கார்டு மோசடி, வணிக மின்னஞ்சல் சமரசம், இணைய வங்கி தொடர்பான மோசடி மற்றும் ஆபத்தான UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) மோசடி (47.25 சதவீதம்) ஆகியவை துணைப்பிரிவுகளில் அடங்கும்”, என்றும் ஆன்லைனில் நடத்தப்படும் நிதி பரிவர்த்தனைகளைப் பாதுகாக்க வலுவான இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று FCRF தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் தொடர்பான குற்றங்கள் 12.02 சதவீதம் ‘ஆன்லைன் குற்றங்கள்’ என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.