அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை
Sep 10, 2026, 10:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Manikandan by Manikandan
Jan 13, 2026, 06:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கலாக வெறும் இலவசத்திற்காக மக்களை ஆடு மாடுகள் போன்று கூட்டி இருக்கிறார்கள் அண்ணாமலை பேச்சு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வாசுதேவநல்லூரில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஏற்பாட்டில் 1008 பானைகளில் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது.‌ இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்

அவர் நிகழ்விடத்திற்கு வருகை தரும்போது பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பெண்கள் ஏராளமானோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், நையாண்டி மேளம் இசை மற்றும் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட வரவேற்பாளித்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் முன்னாள் பாஜக தலைவரோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்களை துணியால் கட்டிக்கொண்டு உரியடி அடித்து உடைத்து அசத்தினார் தொண்டர்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை தென்காசி மாவட்டத்திற்குள் நான் நுழையும்போது எனது சொந்த கிராமத்திற்குள் நுழைவது போல என்னால் உணர முடிகிறது இந்த பூமி சாதாரண பூமி அல்ல வெண்ணிக்காலாடி ஒண்டிவீரன், பூலித்தேவன் உள்ளிட்ட வீரர்கள் வாழ்ந்து மறைந்த பூமி ஒரே சட்டமன்ற தொகுதியில் மூன்று மாவீரர்கள் அமைந்த பெருமை வாசுதேவநல்லூர் தொகுதியை சாறும் இந்த தைப்பொங்கல் திருநாளில் நான் சொல்லக்கூடிய சத்திய வார்த்தை என்னவென்றால் தென்காசியில் நல்ல மனிதர்களை ஆட்சி பொறுப்பில் கொண்டு வந்து உட்கார வைக்க வேண்டும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் புழுதிக்காட்டை‌ பார்த்தவர்களை அரியணை ஏற வைக்க வேண்டும் தேசிய சிந்தனை இருப்பவர்களும் மண்ணை நேசிப்பவர்களுக்கும் உங்கள் வாய்ப்பை கொடுக்க வேண்டும் எலுமிச்சை-க்கு பேர் போன புளியங்குடி எலுமிச்சை கன்றுகள் எங்களது தோட்டத்தில் நடவு செய்துள்ளேன்

வாசுதேவநல்லூர் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்துள்ளது தற்போது அது குறைந்து விட்டது காரணம் செண்பகவல்லி அணை உடைப்பு தமிழக அரசு சரி செய்யவில்லை ஆனால் இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்த காமராஜர் மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் உடைப்பு ஏற்பட்ட போதெல்லாம் அணையை சரி செய்தனர்

திமுக தேர்தல் அறிக்கை எண்: 84 செண்பகவல்லி அணையை சரி செய்வோம் என்ற அறிக்கை என்ன ஆச்சு ஐந்து முறை கேரளாவுக்கு சென்ற முதலமைச்சர் இது பற்றி பேசவில்லை ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை நமது ஆட்சி அமையும் போது கேரள அரசுக்கு அழுத்தம் கொடுத்து செண்பகவல்லி அணை சரி செய்யப்படும் என அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.

தென்காசியில் கனிமவள கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது இயற்கை வளங்கள் அதிகமாக சுரண்டப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது

அதனை தடுத்து நிறுத்த வேண்டும் இதன் தாக்கமாக திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளராக இருந்த கடையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் இந்த கனிம வள சுரண்டலுக்கு எதிராக தனது கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது திமுகவில் ஒரு சில நல்லவர்கள் மனசாட்சி உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என சந்தோசப்பட்டேன் அரசியல் பேசக்கூடிய இடம் இது இல்லை இருந்தாலும் அரசியலும் முக்கியம் அரசியல் நன்றாக இருந்தால் அது தமிழர் பொங்கல் அரசியல் நன்றாக இல்லை என்றால் அது திமுக பொங்கல் என மாறிவிடும் வெறும் இலவசத்திற்காக‌ மக்களை கூட்டி வந்து ஆடு மாடுகளைப் போல் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்

அதுபோல நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது கம்பீரமாக தாய்மார்களை கூட்டு வந்து பொங்கல் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனை அடுத்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்…

Tags: bjpannamalaibjp indiatenkasitnbjp'Namma Ooru Modi Pongal' festival
Share
Tweet
SendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Next Post

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies