ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா, கம்போடியாக்கு இடையேயான வாலிபால் விளையாட்டில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.
ஆசியா விளையப்போட்டிகள் செப்டம்பர் 23 அன்று தொடங்கவுள்ளது. ஆனால் ஒரு சில விளையாட்டுகள் மட்டும் செப்டம்பர் 19 தேதி தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் நேற்று ஆடவர் வாலிபால் போட்டி நடைபெற்றது.
இதில் வாலிபால் பிரிவு சி-யில் உள்ள இந்தியா மற்றும் கம்போடியா அணிகள் நேற்று ஹாங்சோவில் உள்ள சிஎக்ஸ்சி ஜிம்னாசியத்தில் போட்டியிட்டன. இதில் இந்திய அணி 25 -14, 25-13, 25-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்திய அணி இன்று தென் கொரியாவை எதிர்கொள்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வாலிபாலில் கடந்த 37 ஆண்டுகளாக பாதகங்களை வென்றது இல்லை. இந்திய வாலிபால் அணி 1962 ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. அதன் பிறகு 1986 ஆம் ஆண்டு தான் வெண்கலம் வென்றது. ஆனால் இதன் பிறகு இந்தியா எந்த பதக்கத்தையும் வாலிபாலில் வாங்கவில்லை. இந்நிலையில் இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி இந்த ஆண்டு பதக்கத்தை வேலும் என்பதே இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.