ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான்- அமித்ஷா!
Nov 18, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான்- அமித்ஷா!

Web Desk by Web Desk
Sep 20, 2023, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 நாட்டை நடத்துவது அரசாங்கம்தான், செயலாளர்கள் அல்ல என்பது ராகுல் காந்திக்கு யார் புரிய வைப்பார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “எனது சகாக்களில் ஒருவர்  நாட்டை நடத்துபவர்களின் எண்ணிக்கையில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியிருக்கிறார். நாட்டை நடத்துவது அரசாங்கம்தானை தவிர, செயலாளர்கள் அல்ல என்பதை அவருக்கு (ராகுல் காந்திக்கு) யார் புரிய வைப்பார்கள். மேலும், ஓ.பி.சி.க்களுக்காகப் பேசுவதாகக் கூறுபவர்கள், ஓ.பி.சி.க்கு பிரதமர் பதவியைக் கொடுத்தது பா.ஜ.க.தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் கொள்கையை அமைச்சரவையும், நாடாளுமன்றமும்தான் முடிவு செய்யும் என்று நமது அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.  எங்கள் கட்சியில் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த 29 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு ஒப்பீடு செய்ய விரும்பினால், எங்களிடம் வாருங்கள்.

எங்கள் மத்திய அமைச்சரவையில் ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த 29 அமைச்சர்கள் உள்ளனர். 1,358 சட்டமன்ற உறுப்பினர்களில் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த 365 பேர் எங்கள் கட்சியில் உள்ளனர். ஓ.பி.சி. பிரிவினரின் நலன் குறித்து தொடர்ந்து பேசுபவர்களின் எண்ணிக்கையில் இது அதிகம். நீங்கள் ஓ.பி.சி. பற்றி பேசுகிறீர்கள். ஆனால், இந்த நாட்டிற்கு ஓ.பி.சி. சமூகத்தில் இருந்து பிரதமரை வழங்கியது பா.ஜ.க.தான்.

தேர்தலுக்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் விரைவில் நடத்தப்படும். அதன் பிறகு பெண்கள் நாடாளுமன்றத்தில் அதிக குரல் கொடுப்பார்கள். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவருவதற்கான 5-வது முயற்சி இது. தேவகவுடா முதல் மன்மோகன் சிங் வரை இந்த மசோதாவைக் கொண்டு வர 4 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இருந்தும் இந்த மசோதா நிறைவேற்றப்படாததற்கு என்ன காரணம்?

பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து, பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் சமமான பங்கேற்பு ஆகியவை அரசாங்கத்தின் உயிர் சக்தியாக உள்ளது. இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள், மகிளா சம்மன் சேமிப்பு திட்டம், மகப்பேறு விடுப்பு மற்றும் பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், ஒரு பெண் குழந்தைக்கு கல்வி கொடுங்கள் எனப் பெண்களுக்கு அதிகாரம் அளித்த முயற்சிகள் ஒருபுறம் . அதேசமயம், இந்த நாட்டில் 5 தசாப்தங்களுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால், 11 கோடி குடும்பங்கள் கழிப்பறை இல்லாதவர்களாக இருந்தனர்.

அவர்களால் ‘கரீபி ஹடாவோ’ கோஷம் போட்டாலும், ஏழைகளுக்கு எந்த ஏற்பாடும் செய்ய முடியவில்லை. ஒரு வீட்டில் கழிப்பறை இல்லாதபோது, ​​அதிகம் பாதிக்கப்படுவது மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள்தான். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாட்டில் முடிவெடுப்பதிலும், கொள்கை வகுப்பதிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும். நாம் இதற்கு முன்பு 4 முறை பெண்களை ஏமாற்றி இருக்கிறோம். ஆகுவே, தற்போது நாம் அரசியலுக்கு அப்பால் உயர வேண்டும். இந்த புதிய தொடக்கத்தில் நாம் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்துடன் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்று எதிர்கட்சிகளுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.

Tags: ParliamentSpeechAmit sha
ShareTweetSendShare
Previous Post

அக்டோபர் 9-ந்தேதி தமிழக சட்டசபை கூடுகிறது!

Next Post

புதிய பணிகளைத் தொடங்கவுள்ள விக்ரம் லேண்டர்!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies