அதிவேக பயணிகள் படகு சேவை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், இந்தியா இலங்கை இடையேயான அதன் முதல் பயணத்தைத் தொடங்க உள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
நமது நாட்டுக்கும், நமது நாகரிக இரட்டை நாடான இலங்கைக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியாக, கடுமையான சூறாவளி காரணமாக 1960களில் நிறுத்தப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவையை, நமது மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்கள், சமீபத்தில்… https://t.co/BRLoMiw2Di
— K.Annamalai (@annamalai_k) September 21, 2023
நமது நாட்டுக்கும், நமது நாகரிக இரட்டை நாடான இலங்கைக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியாக, கடுமையான சூறாவளி காரணமாக 1960களில் நிறுத்தப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவையை, நமது பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மீண்டும் தொடங்கியிருந்தார்.
இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்ததை, நமது மத்திய அரசு ₹300 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைத்துள்ளது. இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம், 150 பயணிகள் பயணம் செய்யக்கூடிய அதிவேக பயணிகள் படகு ஒன்றை இந்தச் சேவைக்காக வழங்கியுள்ளது என்பதையும், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், இந்தியா இலங்கை இடையேயான அதன் முதல் பயணத்தைத் தொடங்கவிருக்கிறது என்பதையும் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன், எனத் தனது எக்ஸ் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.