கனடா காலிஸ்தான் தீவிரவாதிகள் பட்டியல்: என்.ஐ.ஏ. வெளியீடு!
Jul 29, 2026, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா காலிஸ்தான் தீவிரவாதிகள் பட்டியல்: என்.ஐ.ஏ. வெளியீடு!

சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 21, 2023, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவுகள் வலுவிழந்திருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாத கும்பல் வலையமைப்புடன் தொடர்புடைய 43 பேரின் விவரங்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) வெளியிட்டிருக்கிறது.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நஜர், மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். மேலும், அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரியையும் வெளியேற்றியது. இதற்கு பதலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டின் உயர் தூதரக அதிகாரியை மத்திய அரசு வெறியேற்றியது. இதனால், இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், கனடா நாட்டுடன் தொடர்புடைய காலிஸ்தான் தீவிரவாதிகள் 43 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேலும், மேற்கண்ட 43 பேரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை கையில் எடுத்திருக்கும் என்.ஐ.ஏ., அந்த 43 நபர்களுக்கும் சொந்தமான சொத்துக்கள், வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பகிருமாறு மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. இவை மத்திய அரசால் கையகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது தவிர, 43 பேரின் வணிகக் கூட்டாளிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் சேகரிப்பு முகவர்களின் விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு, லாரன்ஸ் பிஷ்னோய், ஜஸ்தீப் சிங், கலா ஜாதேரி என்கிற சந்தீப், வீரேந்திர பிரதாப் என்கிற கலா ராணா மற்றும் ஜோகிந்தர் சிங் ஆகியோரின் படங்களையும் தேசிய புலனாய்வு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

மேலும், மேற்கண்ட 5 பேரும் என்.ஐ.ஏ. வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும், இவர்களின் பெயரிலோ அல்லது இவர்களது கூட்டாளிகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரிலோ சொத்துக்கள், வணிகம் பற்றிய தகவல் இருந்தால், கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கவும் என்று கூறி, +91 7290009373 என்கிற செல்போன் எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, இந்த கும்பல்களில் பெரும்பாலோர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் என்.ஐ.ஏ. நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Tags: NiaterroristCanadakhalistan
ShareTweetSendShare
Previous Post

இலங்கை காங்கேசன்துறை இடையேயான படகு சேவை- அண்ணாமலை மகிழ்ச்சி!

Next Post

 காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தோல் சிங் அலியாஸ் சுகா கொல்லப்பட்டார்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies