கொச்சி விமான நிலையத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய புலனாய்வு பிரிவு (AIU) அதிகாரிகள் பயணிகளைச் சோதினை செய்யும் போது தங்கம் கடத்தி வந்தவர்களை கைது செய்துள்ளனர். கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோலாலம்பூரில் இருந்து கொச்சிக்கு வந்த ஒரு பயணியை சுங்கத்துறை AIU தடுத்து நிறுத்தினர். அவரை சோதனைச் செய்த போது “மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1091 கிராம் எடையுள்ள, கலவை வடிவில் தங்கம் அடங்கிய நான்கு உருளை வடிவ கேப்சூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 48 லட்சம் ரூபாய் ஆகும்.
மற்றொரு பயணியை, சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனைச் செய்த போது, கலவை வடிவில் வெளிநாட்டு தங்கம் அடங்கிய உருளை வடிவ கேப்சூல்கள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கம் 1066.43 கிராம் எடை, இதன் மதிப்பு 50 லட்சம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.