கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரியிழந்த நிலையில், அதே ஊரில் கல்லூரி மாணவர் பர்கர் சாப்பிட்டு மருத்துமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய நமது இளைய தலைமுறையினர் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஷவர்மா-வும், பர்கரும்தான். காரணம், இதன் சுவை மற்றும் விரைவாக கிடைப்பது என்பதுதான். முதலில், ஷவர்மாவைப் பார்ப்போம்.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் உணவுதான் ஷவர்மா. 19-ம் ஆண்டில் துருக்கியில் அறிமுகமானது. ஷவர்மாவில் சிக்கன் ஷவர்மா, வெஜிடபுள் ஷவர்மா எனப் பல வகை உண்டு. இந்தியாவில் 1997-ம் ஆண்டு ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டது.
வேகவைத்த இறைச்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ரொட்டியில் வைத்துச் சுருட்டி தயாரிக்கப்படுகிறது. சுவைக்காக, முட்டைக்கோஸ், சாஸ், மாயோனைஸ் உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. இதில், கெட்டுப்போன இறைச்சியைப் பயன்படுத்தும்போது விஷமாகிறது. இதுவே, உயிரைப் பலி வாங்குகிறது.
அடுத்து, பர்கரை எடுத்துக் கொண்டால், இரு ரொட்டிகளுக்கிடையே இடையே அரைத்த இறைச்சி வைக்கப்பட்டு, கீரை, இறைச்சி, தக்காளி, வெங்காயம், வெள்ளரி, பாலாடைக்கட்டி, எள் பயன்படுத்தப்படுகிறது. இதிலும், கெட்டுப்போன இறைச்சியைப் பயன்படுத்தும்போதுதான் விஷமாகி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இவைகள் நமது உடலுக்கு நன்மை பயப்பதைவிட, கெடுதலையே அதிகம் செய்கிறது. ஆனாலும், இளசுகளை இந்த உணவே சுண்டி இழுக்கிறது.
நமது காலநிலை, செரிமானம், உடலுக்குத் தேவையான புரோதம் உள்ளிட்ட சத்துக்களை கணக்கில் கொண்டு, முழு தானியங்களை எடுத்துக் கொள்வதே ஆரோக்கியத்தின் முதல்படி.