பிரதமர் மோடியின் வாட்ஸ் ஆப் சேனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் நாளிலேயே 1 லட்சத்தைத் தாண்டிய எண்ணிக்கை, தற்போது 10 லட்சத்தைக் கடந்திருக்கிறது.
பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுடன் தொடர்பில் இருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வாட்ஸ் ஆப் சேனலிலும் அடி வைத்துள்ளார். உலகத் தலைவர்கள் மத்தியில் சமூக ஊடகங்களில் அதிகம் பின் தொடரப்படும் பிரபலங்களில் ஒருவராக விளங்குகிறார் பிரதமர் மோடி. பேஸ்புக், எக்ஸ் , யூடியூப் உட்பட எல்லா தளங்களிலும் அவர் நிறைந்திருக்கிறார். அவரது சகல நகர்வுகளும், நாட்டு மக்களுக்கு அவர் தெரிவிக்க விரும்பும் தகவல்களும் உடனுக்குடன் இந்த சமூக ஊடகப் பக்கங்களில் அவரது அலுவலகத்தினரால் பதிவேற்றப்படுகின்றன.
பேஸ் புக்கின், ”மெட்டா” நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற செயலியான ‘வாட்ஸ் அப்’ நிறுவனம், தற்போது ‘வாட்ஸ் அப் சேனல்” என புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாட்ஸ் அப் சேனலில் இணைந்து, புதிய நாடாளுமன்றதின் பிரதமர் அலுவலக அறை, பார்வையாளர்கள் அறை உள்ளிட்ட புகைபடங்களைத் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அவர் சேனலில் இணைந்த ஒரே நாளில் வாட்ஸ்அப் சேனலைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்தைக் கடந்துள்ளது. பிரதமரின் வாட்ஸ் அப் சேனல்லுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துவருகின்றனர்.