விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சத்துக்கும் மேலான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
பாரத நாட்டில் தர்மம் நிலைத்திட பாரத பிரதமர் நரேந்திர மோடியால் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டது. அந்த செங்கோல் மூலம் தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியத்தின் மகத்துவம் உலகறியப்பட்டது.
அதே போல் தமிழகத்தில் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் செங்கோல் விநாயகர் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
சுமார் 16 அடியில் செங்கோல் விநாயகர் பார்ப்போரை, மெய் சிலிர்க்க வைத்தது. விநாயகர் கையில் செங்கோல் ஏந்தியப்படியும், தோள்பட்டையில் மயிலிறகும், இருக்க காண்போரைக் கவர்ந்திழுத்தது .
தமிழகத்தில் இந்துக்கள் ஒற்றுமை ஓங்கிட வேண்டும், தர்மம் நிலைநாட்டப் பட வேண்டும், கொடுங்கோல் நீங்க வேண்டும் எனப் பிராத்தனை செய்து செங்கோல் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்குள்ள மக்கள் செங்கோல் விநாயகரைப் பக்தியுடன் வழிபட்டனர்.
உலகத்திலேயே முதல் முறையாக செங்கோலுடன் காட்சியளித்த செங்கோல் விநாயகர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.