அல்சைமர் நோய் என்பது நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன்களை மெதுவாக அழித்து, இறுதியில், எளிமையான பணிகளைச் செய்யும் திறனைக் குறைக்கிறது.
மனித மூளை பல நூறு கோடி நரம்பு செல்களால் ஆனது. அவை ஒன்றுக்கொன்று தொடர்புக் கொள்கின்றன. நாம் பேசுவது, காண்பது, நடப்பது என நமது அனைத்துச் செயல்களுக்கும் இந்தத் தொடர்புதான் முக்கியம். துவக்க கால அல்சைமர் நோய் அறிகுறி என்பது குறுகிய கால நினைவாற்றல் இழப்பாக தான் இருக்கிறது. அல்சைமர் நோயின் அறிகுறிகளை பொறுத்து தீவிரம் மாறும்.
எதையும் நினைவில் வைத்து கொள்ள முடியாமல் அடிக்கடி மறப்பது, நன்கு பழகியவர்களை கூட மறந்து விடுவது, அதிக குழப்பம், அன்றாட இயல்பு வாழ்க்கை செயல்களை செய்வதில் சிரமம், எடை இழப்பு, ஒரே விஷயத்தை பற்றியே அடிக்கடி பேசுவது உள்ளிட்ட பல அறிகுறிகள் உள்ளன.
அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஏனென்றால் இது சில நேரங்களில் முதியவர்ளை மட்டுமின்றி 40 – 45 வயது உள்ளவர்களுக்கு கூட யற்படுவதை பார்க்க முடிகிறது. பெரும்பாலான மக்களுக்கு, அல்சைமர் நோய் மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவை உள்ளிட்டவை காலப்போக்கில் மூளையை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சில நேரங்களில் பல உடல் செயல்பாடுகளை இழக்க வழிவகுக்கும் அல்சைமர் நோய், மரபணு, குடும்ப வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவை, வயது முதிர்ச்சி, பாலினம், தலையில் ஏற்படும் பலத்த காயங்கள், அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், சீரான தூக்கமின்மை பழக்கம், அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் எடுத்து கொள்வது உள்ளிட்டவை ஆபத்து காரணிகளாக குறிப்பிடப்படுகின்றன.