தமிழகத்தில் 6 முக்கிய ரயில் சேவையை, சீரமைப்புப் பணி காரணமாக, ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களும் சாலைப் பயணத்தைவிட ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். காரணம், ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானது என்பதாலும், குடும்பத்தோடு செல்வதற்கு உகந்தது என்பதாலும், பொது மக்கள் ரயில் பயணத்தை மிகவும் விரும்புகின்றனர்.
இதனால், நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் குறுகிய ரயில் பயணங்களில் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்வோர் தினசரி ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டக்கல் ரயில் கோட்டத்தில் சில பகுதிகளில் உள்ள ரயில் பாதை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 6. 45 மணிக்குப் புறப்படும் திருப்பதி டூ காட்பாடி ரயில், அதேபோல 9.30 மணிக்குப் புறப்பட வேண்டிய காட்பாடி டூ திருப்பதி ரயில், வரும் 24-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், காலை காலை 9.30 மணிக்கு காட்பாடி டூ ஜோலார்பேட்டை ரயில், அதேபோல மதியம் 12:40 மணிக்கு ஜோலார்பேட்டை டூ காட்பாடி செல்லும் ரயில் ஆகியவை வரும் 24-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், காலை 5:30 மணிக்கு விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில், காட்பாடி வரை மட்டுமே செல்லும் என்றும், அதேபோல, காட்பாடியிலிருந்து விழுப்புரம் வரை மட்டுமே ரயில் சேவை தொடரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.