சென்னையில் காதலிக்க மறுத்த மாணவியை, கல்லூரி மாணவர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேடவாக்கத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் படிக்கும் மாணவி ஒருவரை, வேறு கல்லூரி மாணவர் ஒருவர் ஒரு தலைப்பச்சமாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தன்னை காதலிக்க வேண்டும் என அடிக்கடி அந்த மாணவியை அந்த மாணவன் வற்புறுத்தி உள்ளார். ஆனால், இதற்கு அந்த மாணவி சம்மதிக்கவில்லை.
இதனால், அந்த மாணவர், தனக்குக் கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று, அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கல்லூரி மாணவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த மாணவர் பெயர் வசந்த் என்றும், அவர் கல்லூரி ஒன்றில் படித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, வசந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.