நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, மாபெறும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வரும் நேரத்தில், வழக்கம் போல் திமுகவினர் மடைமாற்றும் வேலையை கச்சிதமாக செய்தனர்.
அதாவது, நாடாளுமன்றத்தில், சந்திரயான் வெற்றி தொடர்பாகப் பேசப்பட்டது. காங்கிரஸ் எம்பி சசி தரூரைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் எப்போதும் பேசி வரும் திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசினார். வழக்கம் போல் சர்ச்சையை எழுப்பினார்.
இதனால், அவரது பேச்சுக்கு ஆளும் தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதற்கு முறையாகப் பதில் சொல்லாமல், ஆவேசப்பட்ட தயாநிதி மாறன், ஏய், உட்காருடா, உதை வாங்கப் போற என்று சக உறுப்பினர்களைப் பார்த்து அநாகரீக நடந்து கொண்டதோடு, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்தக் காட்சி நாடாளுமன்ற தொலைக்காட்சி மூலம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு கண்ணியக்குறைவானது என்றும், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அவை நாகரீகத்தை கடைப்பிடிப்பது இல்லை என்றும், பொது வெளியிலும் நாகரீகத்தைக் கடைப் பிடிப்பது இல்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
தயாநிதி மாறனின் இந்தப் பேச்சுக்கு, பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தனது செயலுக்காக தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்கவேண்டும் என அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரஸாக குரல் எழுப்பி வருகின்றனர்.