டெல்லி உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIMS) இல், கார்டியோ தோராசிக் சென்டரில் பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படும் செய்திகளை எய்ம்ஸ் மறுத்துள்ளது.
தில்லி எய்ம்ஸ் வெளியிட்டடுள்ள அறிக்கையில், “புது டெல்லியில் உள்ள AllMS கார்டியோ-தொராசிக் சென்டரில் எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை”.
பொருட்கள் கொள்முதல் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் புதுதில்லி எய்ம்ஸ் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இருப்பினும், கார்டியோ தொராசிக் மையத்தில் அறுவை சிகிச்சை நடைமுறைகளில் அட்டவணைப்படி மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.