இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் சிறந்த சுற்றுலா கிராமப் போட்டியை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டி தொடங்கிவைத்தார். இது உள்ளூர் கலை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பாதுகாக்கும் கிராமங்களைக் கவுரவிப்பதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும். இதற்கான இணையதளமும் வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து, சிறந்த சுற்றுலா கிராமப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும், குறிப்பாக இளைஞர்களைப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 791 விண்ணப்பங்கள் வந்தது.
இந்நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக அசாம் மாநிலத்தின் பிஸ்வநாத் காட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கிரிடேஸ்வரி ஆகியவைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா எக்ஸ் பதிவில் “சுற்றுலா அமைச்சகத்தால் 2023-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலமாக பிஸ்வநாத் காட் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளதைப் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்த 791 விண்ணப்பங்களில் இருந்து பிஸ்வநாத் காட் கிராமம் தேர்வு செய்யப்பட்டதன் மூலம், நமது அரசு கிராமப்புறங்களை மேம்படுத்துவதில் எடுத்துள்ள பெரும் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது“என்று தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் சதுப்பு நிலக் காடுகள், சுவை மிகுந்த உணவுகள், பாரம்பரிய மிக்க கலாச்சாரம், பறந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பு, பசுமை மிக்க தாவரங்கள் மற்றும் அரிய விலங்கினங்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும்.
அதுமட்டுமல்லாது, திரைப்படப் படப்பிடிக்கு ஏற்ற இடமாகவும் இந்த பகுதிகள் விளங்குகிறது. தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இயற்கையான பசுமை நிறைந்த கோல்ஃப் மைதானங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும். ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது.
இதேபோல், மேற்கு வங்க மாநிலத்தின் கிரிடேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளது