இந்த நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் வாலிபர்கள் பாட சாலைகளில் சுதேச மகான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்க்கிறார்கள். முக்கியமாக, கிருஸ்துவ பாடசாலைகளில் இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவேயில்லை.
வியாசர், யக்ஞவல்க்யர், ஆதிசங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. கேள்விப்பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரீகம் தெரியாதவர்கள் என்ற விஷயத்தையே கேள்வியுறுகின்றார்கள்.
தந்தி, மோட்டார் வண்டி முதலிய விஷயங்களைப் பற்றி கேள்விப்பட்டிராததனால் கம்பன் தெய்வீகமான கவியென்பது பொய்யாய் விடுமா? ஒரு கிருஸ்துவ பாடசாலை உபாத்தியாயருடன் பேசிக்கொண்டிருந்த போது, உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட வியாசனுக்குத் தெரியாதே, உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரீக ஜனங்கள் என்று கூறினார். இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் இடத்தை தீமை உண்டாக மாட்டாது?
நமது முதலாவது கடமை யாதென்றால், நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மகாத்மாக்களைப் பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்குத் தேச பக்தி, சௌரியம், ஒழுக்கம் முதலியன ஏற்படச் செய்ய வேண்டும்.
சிவாஜியைப்பற்றி சின்க்ளேர் எழுதியிருக்கும் குளறுபடிகளும், உபநிஷத்துகளைப்பற்றி பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம சத்துருக்களாக முடிவோம்” என்று 116 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதியார் எழுதியுள்ள கட்டுரையே இது.
நான்கு சதவீதம் நம் நாட்டில் இருப்பது கிறிஸ்துவர்கள் தான் என்பது அப்பாவுக்குத் தெரியுமா? 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் விண்ணை முட்டும் அளவிற்கு சர்ச்சைகள் இருந்தனவா?
அப்பாவு அவர்களே, அந்த 4 சதவீதம் தான் நம் அறிவார்ந்த சமுதாயத்தை நாசமாக்கியது என்று பாரதியின் வாக்கு சொல்கிறதென்றால் ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் சொன்ன அந்த 4 சதவீத அருட்சகோதரர்கள், கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தைச் சிதைத்து, தங்களின் மதத்தைத் திணித்தார்கள் என்பதையும், மதமாற்றத்திற்கு வழி வகுத்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்களா அப்பாவு அவர்களே? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.