தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலான, திருநெல்வேலி – சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி, அதாவது நாளைய தினம், பாரத பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தனது எக்ஸ் பதிவில்,
தென் தமிழகத்தின் முதல் மற்றும் தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி – சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ஆம் தேதி பாரத பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
தென் தமிழகத்தின் முதல் மற்றும் தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி – சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24-ஆம் தேதி பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள்… pic.twitter.com/ZKp2ydl9DA
— Dr.L.Murugan (@Murugan_MoS) September 22, 2023
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ரயில் மூலம், தென் தமிழகத்தையும், தலைநகராமன சென்னையையும் குறைந்த நேரத்தில் இணைக்கிறது . வந்தே பாரத் ரயில் அதிவேகம் மட்டுமல்லாது, அதி நவீன பாதுகாப்பு முறைகளுடன் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாராகி உள்ளது என தெரிவித்துள்ளார்.