இந்திய இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் இரவுப் பயிற்சியில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பயிற்சி மேற்கொண்டனர்.
நாட்டின் வெளிப்புற ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாத்து, நாட்டின் பாதுகாப்பை இந்திய இராணுவத்தினர் உறுதிசெய்கின்றனர். நாட்டைப் பாதுக்காக்க இராணுவ வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் இந்திய இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் இரவுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எம்ஐ-17 ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி சென்று பயிற்சி மேற்கொண்டனர். இந்தச் சிறப்புப் படை வீரர்கள், எந்த நேரத்திலும், எந்த வகையான நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதற்காக ஆண்டு முழுவதும் விரிவானப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
Indian Army is focusing on the modernisation of the Para Special Forces and providing them latest weapons and other equipment. The Special Forces have been carrying out various training activities to be ready to face any possible challenge in operations: Indian Army officials… pic.twitter.com/feXCGuaEKx
— ANI (@ANI) September 22, 2023
இந்திய ராணுவம் சில காணொலியை பகிர்ந்துள்ளது, அதில் இராணுவ வீரர்கள், தைரியமாக பாரா-ஜம்பிங் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இராணுவ வீரர்கள் விமானத்தில் இருந்து குதித்து, அவசர காலத்தில் எதிரிகளை சமாளிப்பதற்கு தேவையான கனரக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் குதித்தனர். பாராசூட் உதவியுடன் இராணுவ வீரர்கள் தரையிறங்கி பியிற்சி மேற்கொண்டனர்.