இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணிக்குத் தேர்வாகி விளையாடி வருகிறார்.
அவர் 2013 ஆம் ஆண்டிற்கு பின் ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்காமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார். கடந்த ஆண்டு திடீரென அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதன் பின் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால், இன்னும் சில தினங்களில் உலகக்கோப்பைத் தொடர் துவங்க உள்ள நிலையில், திடீரென அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்தப் போட்டியில் அவர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார். 10 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆனால், அவருக்கு இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், ஒரே போட்டியில் தன் பந்துவீச்சை நிரூபித்து விட்டார். அவரால் நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீச முடியும் என காட்டிவிட்டார். இந்நிலையில் இந்திய அணிக்கு ஆல் – ரவுண்டர் தான் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
எனவே, அஸ்வின் அடுத்த இரண்டு போட்டிகளில் தன் பேட்டிங் திறனையும் நிரூபிக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவிக்கும் ஆற்றல் உள்ளவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து இருக்கிறார். அதே போல அடுத்த இரு ஒருநாள் போட்டிகளிலும் பேட்டிங் செய்து ரன் குவிக்க முடியும் என நிரூபித்தால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் நிச்சயம் இடம் உண்டு.
அதற்காக நேற்றைய போட்டி முடிந்த உடனே அடுத்தப் போட்டிக்காகப் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.