உலக கோப்பைக்குத் தகுதிப் பெறுவாரா தமிழக வீரர் அஸ்வின் ?
Sep 12, 2026, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக கோப்பைக்குத் தகுதிப் பெறுவாரா தமிழக வீரர் அஸ்வின் ?

இந்திய அணியில் நீண்ட நாட்களுக்கு பின் இடம் பெற்று ஒருநாள் போட்டியில் ஆடிய அஸ்வினுக்கு இன்னும் ஒரு பரீட்சை மீதம் உள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 23, 2023, 04:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணிக்குத்  தேர்வாகி விளையாடி வருகிறார்.

அவர் 2013 ஆம் ஆண்டிற்கு பின் ஒருநாள் போட்டிகளில் இடம் கிடைக்காமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார். கடந்த ஆண்டு திடீரென அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதன் பின் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால், இன்னும் சில தினங்களில் உலகக்கோப்பைத் தொடர் துவங்க உள்ள நிலையில், திடீரென அவருக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்தப் போட்டியில் அவர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார். 10 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஆனால், அவருக்கு இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், ஒரே போட்டியில் தன் பந்துவீச்சை நிரூபித்து விட்டார். அவரால் நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீச முடியும் என காட்டிவிட்டார். இந்நிலையில் இந்திய அணிக்கு ஆல் – ரவுண்டர் தான் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.

எனவே, அஸ்வின் அடுத்த இரண்டு போட்டிகளில் தன் பேட்டிங் திறனையும் நிரூபிக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவிக்கும் ஆற்றல் உள்ளவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து இருக்கிறார். அதே போல அடுத்த இரு ஒருநாள் போட்டிகளிலும் பேட்டிங் செய்து ரன் குவிக்க முடியும் என நிரூபித்தால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் நிச்சயம் இடம் உண்டு.
அதற்காக நேற்றைய போட்டி முடிந்த உடனே அடுத்தப் போட்டிக்காகப் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Tags: INDIAN CRICKETaswin cricket
Share
Tweet
SendShare
Previous Post

டேபிள் டென்னிஸில் 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்திய இந்தியா !

Next Post

ஊட்டியில் கனமழை – சுற்றுலாப் பயணிகள் அவதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies