இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பிடிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் ஜி20 தலைமை நீடித்த புகழை பெற்றிருக்கும் என்று மொரீசியஸ் நாட்டின் வேளாண் தொழில் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மணீஷ் கோபின் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78-வது அமர்வு 26-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பொது விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த சூழலில், “உலகளாவிய தெற்குக்கான இந்தியா- ஐ.நா: வளர்ச்சிக்கான டெலிவரிங்” என்கிற நிகழ்வில் உரையாற்றிய மொரீசியஸ் நாட்டின் வேளாண் தொழில்துறை அமைச்சர் மணீஷ் கோபின், “டெல்லியில் ஒரு மறக்க முடியாத மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஜி20 உச்சி மாநாட்டை நடத்தியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு வாழ்த்துகள்.
டெல்லி பிரகடனத்தின் அனைத்து பாராக்களும் சீனா, ரஷ்யா உட்பட அனைத்து நாடுகளும் 100 சதவிகித ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொண்டன. இதன் மூலம் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள நாடுகள், பொது நலனுக்கான வேறுபாடுகளை சமாளிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜி20 மாநாட்டில் மொரீஷியஸ் நாட்டையும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பெருமையாக இருந்தது. மேலும், இம்மாநாடு ஒரு தெற்கின் குரலாக ஒலிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவி வரலாற்றில் இடம்பிடிக்கும். சர்வதேச சமூகத்திற்குள் வேறுபாடுகள் பெருகிவரும் நிலையில், நிலையான மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான மாநாடாக ஜி20 அமைந்தது. அதேபோல, ஜி20-ன் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியனைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. பன்முகத்தன்மையை முன்னேற்றுவதற்கும், உலகளாவிய தெற்கில் செழிப்பைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்தியாவின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்றார்.
எனது சொந்த நாட்டைப் பொறுத்தவரை, நரேந்திர மோடியால் சூப்பர் ஸ்பெஷல் என்று தகுதி பெற்ற இந்தியாவுடனான நமது நீண்டகால உறவு, பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று உறவுகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. மொரீஷியஸ் மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்பு முதலீட்டு உள்கட்டமைப்பு, வர்த்தகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைகிறது” என்று கூறினார்.