பி.ஆர்.ஓ. தற்காலிக தொழிலாளர்களுக்கும் சிறப்பு வசதி: ராஜ்நாத் சிங் ஒப்புதல்!
Oct 3, 2025, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி.ஆர்.ஓ. தற்காலிக தொழிலாளர்களுக்கும் சிறப்பு வசதி: ராஜ்நாத் சிங் ஒப்புதல்!

சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் விரிவுபடுத்தல்! 

Web Desk by Web Desk
Sep 24, 2023, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ.) பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எஃப்) பணியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய ‘சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து’ விதிகளை, தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் (சி.பி.எல்.) நீட்டிக்க மத்திய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதேபோல, சி.பி.எல்.களுக்கான ஈமச்சடங்கு செலவை 1,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

பி.ஆர்.ஓ. திட்டங்களின்போது  அரசுப் பணியில் இருக்கும் எந்தவொரு தற்காலிக ஊதியம் பெரும் தொழிலாளர் இறந்தாலும், அவரது இறுதிச் சடங்குகள் பணித்தளத்திலேயே செய்யப்பட்டு வருகின்றன. முன்னோக்கிய/எல்லைப் பகுதிகளில் சாலைகளை நிர்மாணிப்பதற்காக சி.பி.எல்.கள் பி.ஆர்.ஓ.வால் பணியமர்த்தப்படுகின்றனர். இவர்கள் பாதகமான காலநிலை மற்றும் கடினமான வேலை நிலைமைகளில் பி.ஆர்.ஓ. ஊழியர்களுடன் கைகோர்த்து வேலை செய்கிறார்கள். இது சில நேரங்களில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

இவ்வாறு உயிரிழக்கும் தொழிலாளர்களின் சடலங்களை அரசு செலவில் பாதுகாத்து, சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் வசதி, ஜி.ஆர்.இ.எஃப். பணியாளர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. அதேசமயம், சி.பி.எல்.களுக்கு இந்த வசதி மறுக்கப்பட்டது. இவர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், போக்குவரத்து சுமை, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது விழுகிறது. எனவே, நிதி ஆதாரங்கள் இல்லாததால், பெரும்பாலான நிலைமைகளில் விமான கட்டணம் அல்லது சாலை வழியான போக்குவரத்து செலவுகளைக் கூட இறந்தவரின் குடும்பத்தினரால்  தாங்க முடியவில்லை.

துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பம் பெரும்பாலும் இறுதிச் சடங்கு மற்றும் பிற தொடர்புடைய செலவுகளைச் சமாளிப்பது மிகவும் கடினம். இத்தகைய சூழ்நிலைகளில், இறந்த சி.பி.எல்.களின் நெருங்கிய உறவினர்கள்/சட்டப்பூர்வ வாரிசுகள், தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த உறவினர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதன் மூலம் அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கிடைக்காது. இந்த சூழலில், பி.ஆர்.ஓ. பணித்தளங்களுக்குச் சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சி.பி.எல்.களின் கடினமான வேலை நிலைமைகளைக் கண்டார்.

இதையடுத்து, சி.பி.எல்.களின் நலனில் அக்கறை கொண்ட அவர், தற்காலிகத் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களை வகுக்குமாறு, பி.ஆர்.ஓ.வுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, எல்லை சாலைகள் அமைப்பின் (பி.ஆர்.ஓ.) பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எஃப்) பணியாளர்களுக்கு கிடைக்கக் கூடிய ‘சடலங்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து’ விதிகளை, தற்காலிக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் (சி.பி.எல்.) நீட்டிக்க மத்திய  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதேபோல, சி.பி.எல்.களுக்கான ஈமச்சடங்கு செலவை 1,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த புதிய நலத் திட்டங்கள், உயிரிழந்தவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளைச் செய்ய உதவும்.

Tags: Rajnath SinghBROCPL
ShareTweetSendShare
Previous Post

Next Post

3 வது சதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர் !

Related News

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies