இந்தியப் பெருங்கடலில் அத்துமீறும் சீனா: இந்தியா "செக்"!
Aug 8, 2025, 10:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியப் பெருங்கடலில் அத்துமீறும் சீனா: இந்தியா “செக்”!

ஓமன், மொரீஷியஸில் கப்பல், விமானப் படைத்தளம்!

Web Desk by Web Desk
Sep 24, 2023, 08:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியப் பெருங்கடலில் அத்துமீறி ஊடுருவி வரும் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில், ஓமன் மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் கடற்பகுதிகளில் கப்பல் மற்றும் விமானப் படைத்தளம் அமைக்கும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.

அண்டை நாடான சீனா, எல்லை விவகாரம் தொடர்பாக அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கிடையே உரசல்போக்கு நிலவி வருகிறது. அதேபோல, நமது நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், நமது நாட்டின் படைகளை குறிவைத்து நிலம் மற்றும் கடல்வழியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர் மிரட்டல் விடுத்து வருகிறது.

இந்திய பெருங்கடல் குறித்த மத்திய அரசின் தரவுகளின்படி, இந்தாண்டில் மட்டும் சராசரியாக மாதம்தோறும் சீன கடற்படையின் 6 போர்க்கப்பல்கள், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், சீனாவுக்குச் சொந்தமான ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமும், மற்றொரு கப்பலான ‘ஷையாங் 24 ஹவோ’ இந்தாண்டு ஆகஸ்ட் மாதமும் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, சீனாவின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கிழக்கு நாடான ஓமன் நாட்டிலும், கிழக்கு ஆப்ரிக்க தீவு நாடான மொரீஷியஸ் நாட்டிலும் அதிநவீன படைத்தளங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓமனில் உள்ள நுக்ம் துறைமுகத்தில் ஒரு தளத்தை நிறுவியுள்ள மத்திய அரசு, அதை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது.

இங்கு, நமது நாட்டுக் கப்பல்களைப் பராமரிக்கவும், பழுது பார்க்கவும், மாற்றியமைக்கவும், இந்திய கடற்படை கப்பல்களுக்கு தங்கும் இடம், எரிபொருள் மற்றும் ஓய்வு வசதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, மொரீஷியசிஸ் நாட்டின் அகலேகா தீவில் விமானப் படைத்தளம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியினர் மட்டுமே வசிக்கும் இப்பகுதிக்கு, 2015-ல் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து, அங்கிருந்த பழைய விமான ஓடுபாதை, பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டது. மேலும், இராணுவ வீரர்களுக்கான குடியிருப்புகள், பயிற்சிக் கூடங்கள், மைதானம் போன்றவை அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. நவீன கண்காணிப்புக்கான ரேடார்கள், எரிபொருள் கிடங்குகள், கப்பல்கள் வந்து செல்ல உதவியாக துறைமுக இறங்கு தளங்கள் என பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை அனைத்தும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த 2 படைத்தளங்களையும், தகவல் கண்காணிப்பு இடைமறிப்பு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துக் கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு, இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிகள் சீனாவுக்கு நிச்சயம் நெருக்கடியை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Tags: naval air forceOmancentral governmentmauritiusintensified work
ShareTweetSendShare
Previous Post

அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளி: மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிக்கு விண்ணப்பம் வரவேற்பு

Next Post

திமுகவுக்குத் தெரிந்தது ஜாதி அரசியல், பண அரசியல் மட்டும்தான்- அண்ணாமலை விமர்சனம்!

Related News

திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அண்ணாமலை கோரிக்கை!

பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

குன்றத்தூரில் பட்டா பெயர் மாற்ற செய்ய லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது!

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்லை – கிரிக்கெட் வீரர் நடராஜன்

இன்றைய தங்கம் விலை!

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தகவல்!

ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி – இருவர் கைது!

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் – விசிக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் – நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!

பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலம் குகை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – ரூ.100 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்!

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் – நாக்பூர் அருங்காட்சியகத்தில் பார்வையிட்டார் மோகன் பகவத்!

4 ஆண்டு திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ரூ.22,000 கோடி கொள்ளை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது – அஜித்தோவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies