நாடு முழுவதும் உள்ள 100 -க்கும் மேற்பட்ட நகரங்களைத் தேர்வு செய்து, அதனைச் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் முன்மாதிரியான நகரமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சிறந்த நகரங்களில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகிறது.
தமிழகத்தில், சென்னை, கோவை, மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன. இதில், ரூ.1000 கோடி அளவுக்குக் கோவைக்கு பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திட்டப்பணிகள் மற்றும் செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப்பணிகளுக்கு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில், ஸ்மார்ட் சிட்டி விருது விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த விருதுபெற 52 நகரங்களிலிருந்து 88 முன்மொழிவுகள் சென்றிருந்தன.
அந்த வகையில், கோவையில் குளங்கள் புனரமைத்தது, ஆர்எஸ்புரம் மற்றும் டிபி ரோடு மற்றும் ரேஸ் கோர்ஸில் மாடல் ரோடுகளை உருவாக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி சார்பில் முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அதேபோல், ஸ்மார்ட் சிட்டியைச் செயல்படுத்தும் பல்வேறு மாநிலங்கள் போட்டியில் கலந்து கொண்டன. இதில், தேசிய அளவில் தமிழகம் 2-து இடம் கிடைத்ததுள்ளது.
விருது வழங்கும் விழா, மத்தியப் பிரதேசம் இந்தூரில் வரும் 27-ம் தேதி வழங்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, விருதுகளை வழங்க உள்ளார். அதனைக் கோவை மாநகராட்சி சார்பில், கமிஷனர் பிரதாப் பெற்றுக் கொள்கிறார்.