சென்னை மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில், மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதித்துறை ஆணையர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான 2 அரை ஆண்டுகள் பட்டயப்படிப்புகளான ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்பு பயில விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.
மேல்நிலைப்பள்ளி தேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் 04.10.2023 மாலை 5 மணிக்குள் தபால் அல்லது கூரியர் சேவையின் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.