இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன் இரண்டாவதுப் போட்டி இன்று மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக கில் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். இதில் ருத்ராஜ் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து 105 ரன்களில் அட்டமிழந்தார். இந்நிலையில் இந்திய அணிக்கு மேலும் ஒரு சதத்தை பதிவு செய்துள்ளார் சுப்மன் கில்.
இதுவரை இவர் மொத்தமாக 6 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 97 பந்துகளில் 104 ரன்களை எடுத்து கேமரூன் கிரீன் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஒரு நாள் போட்டிகளில் 35 வது இன்னிங்சில் 1,900 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சுப்மன் கில்.