இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இதன்படி இந்தியா அணி பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலிருதே அசத்தலாக விளையாடி வந்த இந்திய அணியின் தொடக்க வீரர் கில் சதம் அடித்து 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 52 ரன்களுக்கு ஆட்டமிழக்க சூரியகுமார் யாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் பெற்றுள்ளார். 43 வது ஓவரில் சூர்யா குமார் யாதவ் கேமரூன் கிரீன் பந்தில் அடுத்தடுத்து நான்கு 6 அடித்து அசத்தினார். இஷான் கிஷன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 29 பௌண்டரிகளும் 18 சிக்சர்களும் அடித்து 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 400 ரன்கள் இலக்காக உள்ளது.
மேலும் ஒரு நாள் போட்டியில் இந்தியா 3000 சிக்சர்களை அடித்த முதல் அணி என்று சாதனையும் படைத்துள்ளது.