மதுரையில் நடந்த ‘கல்வித்துறை ஜேக்டோ’ (டி.என்.எஸ்.இ.) மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை’ என குற்றம் சாட்டப்பட்டது.
கூட்டத்தின் அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன .
இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது ,
தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம் என்கிறார்.
இது அரசின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துவிட்டது. பழைய ஓய்வூதியதிட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை வழங்க வேண்டும்.
உயர்கல்வி தகுதிபெறும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் மீண்டும் வழங்கப்படவேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வழங்கவேண்டும்.
ஆசிரியர் காலிப்பணியிடங்களும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை முடக்குகிற ‘எமிஸ்’ பணியிலிருந்து அவர்களை விடுவிக்கவேண்டும்.
இவற்றை அரசு அக்.30 க்குள் நிறைவேற்ற வேண்டும. இல்லையெனில் நவம்பரில் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன் உண்ணாவிரதம் நடத்தப்படும், என்றனர்.