ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஆண்களுக்கான 25 மீ ரேபிட் பயர் பிஸ்டல் டீம் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் 10 பதக்கங்களுடன் 6 ஆவது இடம் பிடித்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், நேற்று முதல் மகளிர் கிரிக்கெட், துடுப்பு படகு போட்டி, ஏர் ரைபிள் என்று பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், ஏற்கனவே இந்தியா 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 8 ஆவது இடம் பிடித்தது.
இந்நிலையில் இன்று நடந்த ஆடவர் 25 மீ ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி சார்பாக ஆதர்ஷ் சிங், அனிஷ் மற்றும் சிது விஜயவீர் ஆகியோர் பங்குபெற்றன. இதில் மூவரும் இணைந்து 1718 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.
மேலும் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவில் இந்திய அணி சார்பாக பங்குபெற்ற ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 188.0 புள்ளிகளை பெட்ரா வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா அணி 10 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.