“முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலங்களை ஒப்பிடுகையில், மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாகவே இருக்கிறது என ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் நவீன் பட் நாயக் பேசிய போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறோம். எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியது மிகவும் முக்கியமான நடவடிக்கை என நான் நினைக்கிறேன். எனது கட்சி எப்போதும் பெண்களின் வளர்ச்சிக்கு பாடுபடும்.
“முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலங்களை ஒப்பிடுகையில், மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாகவே இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியே பிரதானம் என்பதால் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.
மாநில வளர்ச்சியில் மத்திய அரசையும் ஒரு பங்களிப்பாக வைத்திருப்பது முக்கியம்; நாங்கள் மத்திய அரசுடன் நல்ல நட்பு கொண்டுள்ளோம்.
மத்திய அரசின் வெளியுறவு கொள்கை உள்ளிட்ட செயல்பாட்டுக்காக 10க்கு 8 மதிப்பெண் நான் வழங்குகிறேன். பிரதமர் மோடி தலையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை மற்றும் நாட்டில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடுகளால் ஊழல் குறைந்துள்ளது. நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தன்னால் முடிந்தவரை மோடி முயற்சி செய்துள்ளார் எனத் தெரிவித்தார்.