2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான புதிய போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது ஐசிசி.
2023 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியா நடத்த உள்ளது. இந்த போட்டிகள் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 10 சர்வதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.
இந்நிலையில் ஐசிசி இந்த உலகக் கோப்பைக்கான போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. இதில் 10 அணியின் அணி தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளது. போஸ்டருக்கு மத்தியில் உலகக்கோப்பையில் கோப்பையும் அதனை சுற்றி 10 அணிகளின் தலைவர்களும் இருப்பது போல் வடிவமைக்கப் பட்டுள்ளது.
முன்னதாக இந்தியா அணியின் புதியஜெர்சியை வெளியிட்டிருந்தது. அதில் தோளில் இருந்த மூன்று வெள்ளைக் கோடுகள் இந்திய தேசியக் கொடியில் இருக்கும் முவர்ணங்களாக மாற்றப்பட்டுள்ளன .