இந்திய மாணவர்களுக்கு கடந்த ஜூன் – ஆகஸ்ட் காலகட்டத்தில் 90 ஆயிரம் அமெரிக்கா விசா வழங்கியுள்ளது என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
2030ம் ஆண்டுக்குள் இந்திய மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து அமெரிக்கா தூதரகம் தனது “எக்ஸ்” பதிவில், உலகளவில் 4ல் ஒரு இந்திய மாணவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விசா கிடைத்துள்ளது.
The U.S. Mission in India is pleased to announce that we issued a record number – over 90,000 – of student visas this Summer/ in June, July, and August. This summer almost one in four student visas worldwide was issued right here in India! Congratulations and best wishes to all…
— U.S. Embassy India (@USAndIndia) September 25, 2023
உயர்கல்வி கனவை நனவாக்க அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஜூன் – ஆகஸ்ட் காலகட்டத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 30,000 மாணவர்களை வரவேற்க பிரான்ஸ் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது. இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 4,65,791 மாணவர்கள் அமெரிக்காவில் கல்விக்கான விசா பெற்றுள்ளனர்.
நவம்பர் 15 அன்று வெளியிடப்பட்ட ஓபன் டோர்ஸ் அறிக்கை 2022, சர்வதேச மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு 11.8 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக அதிகரித்திருப்பதாக உள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது.
கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.