கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அவருடைய முதுகில் ‘பிஎப்ஐ’ என எழுதியுள்ளனர்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷைன் குமார். இவர், இந்திய இராணுவத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் கேடரில் பணிபுரிகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் ஷைன் குமாரைத் தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து, அருகிலுள்ள, ரப்பர் தோட்டத்திற்கு கடத்திச் சென்று, கை, கால்களை டேப்பால் கட்டி வைத்து, இடைவிடாமல் கடுமையாக அடித்து, கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவரது முதுகில் பச்சை நிற பெயிண்டால் PFI என்று எழுதியுள்ளனர். பின்னர், அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ஷைன் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில், இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கேரளாவில் பயங்கரவாதிகளுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துமீறல் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்