ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மகளிர் கிரிக்கெட் அணி, 10மீ ஆடவர் ஏர் ரைபிள் குழுவை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா பாராட்டி, வரலாற்று சாதனை என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று முதல் மகளிர் கிரிக்கெட், துடுப்பு படகு போட்டி, ஏர் ரைபிள் என்று பல்வேறு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், இந்தியா 3 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கத்துடன் பதக்கப் பட்டியலில் 8 ஆவது இடம் பிடித்தது.
இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர்களைப் பாராட்டிய பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பதிவில்,
Indian women's cricket team wins Gold at the #AsianGames with a dominant win over Sri Lanka, led by 18-year-old sensation #TitasSadhu's bowling brilliance (3 for 6). Congratulations to the team and support staff for this historic achievement! 🇮🇳 @BCCIWomen pic.twitter.com/md78olzIxS
— Jay Shah (@JayShah) September 25, 2023
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஏசியன் கேம்ஸில் 18 வயதான டிடாஸ் சாதுவின் பந்துவீச்சில் (3 விக்கெட்டுக்கு 6) இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆதிக்க வெற்றியுடன் தங்கம் வென்றது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக துணை நின்ற அணியின் குழுவிற்கும், ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள்!
What an incredible achievement by India's 10m men's air rifle team! Record-breaking performance by World champion #RudrankkshPatil, olympian #DivyanshPanwar, and #AishwaryPratapSinghTomar! First Gold for India at the Asian Games – history in the making! 🇮🇳 Congratulations to our… pic.twitter.com/4Imus86T1J
— Jay Shah (@JayShah) September 25, 2023
இந்தியாவின் 10மீ ஆடவர் ஏர் ரைபிள் குழுவின் அபாரச் சாதனை! உலக சாம்பியன் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோரால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்து சாதனை! எங்கள் சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்! எனத் தெரிவித்துள்ளார்.