பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக உள்ள அமித் காரேவின் பதவி காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித்காரே கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
கடந்த 1985-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ்.கேடரான இவர், இதற்கு முன் உயர்கல்வித்துறை செயலராக பணியாற்றி வந்த நிலையில், பிரதமரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இவரது பணிகாலத்தை மேலும் நீட்டித்து மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ராஜேஷ் கோகலே என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பதவி காலம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.