ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப் பாதையில் பிரேக் டவுன் ஆன ஈச்சர் வேன் ஒன்று அந்தரத்தில் தொங்கிய காட்சி அந்த வழியே செல்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழ்நாடு – கர்நாடகா பகுதியை இணைக்கும் சாலையாக சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப் பாதை உள்ளது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் 1,400 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால், இங்கு வசிக்கும் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதைத் தடுக்கவும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையிலும், பண்ணாரி – திம்பம் இடையேயான மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சத்தியமங்கலம்- திம்பம் மலை பாதையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் அதிகபட்சம் 20 முதல் 30 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லவேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலையில் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப் பாதையில் சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், ஈச்சர் வேன் ஒன்று மலையில் சாலைவிட்டு, வெளியேறி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.
இதனால், அந்த பகுதியில் அனைத்து போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், அந்த வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும், சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும், மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய ஈச்சர் வேனை மீட்கும் பணியில், காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய வேன் டிரைவர் மற்றும் கிளினர் ஆகியோரின் கதி என்னானது என தெரியவில்லை